இறைவனுக்கு என்ன பிடிக்கும் !!

இறைவனுக்குப் பிடித்தது என்ன என்பதற்கு விளக்கம் அளிக்கும் JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்க பதிவு

( இறைவனுக்கு இதுவெல்லாம் பிடிக்கும் !!?? அதுவெல்லாம் பிடிக்காது !!?? என்று பட்டியல் போடும் முன் இதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள் !! )

இறைவனுக்கு என்ன பிடிக்கும் என்று யாரிடமாவது கேட்டால் !!
அவர்கள் ஓர் பட்டியலுடன் வருவார்கள் !!

அதை அபிஷேகம் செய்தால் இது கிடைக்கும் !!

அந்த பூ போட்டால் இது நடக்கும் !!

அந்த என்னை ஊற்றி விளக்கு !!
அந்த நிற திரி !!
அந்த திசை !!
இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும் !!
அவை யாவும் இறைவனுக்கு பிடிக்கச் செய்ய முயல்வதின் வெளிப்பாடே !!

இறைவனுக்கு ஏது பிடிக்கும் என்று யாராவது கேட்டால் !!??
*என்னை_பிடிக்கும் !!*
*உன்னை_பிடிக்கும் !!* என்றே சொல்லுங்கள் !!

ஏன் என்றால் ??

என்னை அணு அணுவாக வடிவமைத்து !! எதையெல்லாம் பொருத்தி !!
எப்படியெல்லாம் நிறம் !! குணம் !!
எல்லாம் வெளிப்பட்டால் !!
நான் நானாக இருப்பேன் !! என்று தன் இஷ்டப்படி அவனது விருப்பமாக என்னைப் படைத்து !!!!!!!!!

எனக்கு
ஏது பிடிக்கும் !!
எப்படிப் பிடிக்கும் !!
எதனால் பிடிக்கும் !! என்று

என்னைவிட அறிந்து பிடிக்கும் படியே அருளியும் !!!
பிடிக்காது என்பதையும் எனக்குத் தேவையென்றால் பிடிக்கும்படி அருளியும் !!
நாளும் நான் என்ன செய்யவேண்டும் !!

எதைச் சந்திக்கவேண்டும் !!
எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் !! என்று
கச்சிதமாக வடிவமைத்து நாளும்
பக்குவப்படுத்திக்கொண்டே இருக்கிறான் இறைவன் !!

அவனுக்கு என்னை எவ்வளவு பிடித்திருந்தால் நம் மீது இத்தனை அக்கறையுடன் என்னை அருளி ஆட்கொண்டு அரவணைத்துச் செல்லமுடியும் !!

அவனுக்கு என்னைத்தான் பிடிக்கும் !!

நான் மட்டுமா என்று பார்த்தால் !!
நான் மட்டும் அல்ல இருக்கும் அனைத்தையுமே அவனுக்குப் பிடித்தாலேயே !!
அது அதுவாகவே இருக்கிறது !! என்ற
மெய்யும் அவனே காட்டி அருள்கின்றான் !!

அவனை நீ பிடிக்கிறாயோ இல்லையோ !!
அவனுக்கு உன்னைப் பிடித்து இருப்பதாலேயே நீ இருக்கிறாய் !!

இப்போது கேளுங்கள்
” இறைவனுக்கு என்ன பிடிக்கும் ?? “”

நமச்சிவாய !! நமச்சிவாய !! நமச்சிவாய !! நமச்சிவாய !! நமச்சிவாய !!

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே