என்ன ஆனது பஞ்சாப் அணிக்கு? – 8 ஓவர்களில் 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் காலி!

மும்பை: சென்னைக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் பஞ்சாப் அணி, பெரியளவில் திணறி வருகிறது. கிட்டத்தட்ட அந்த அணியின் முதுகெலும்பே உடைந்துவிட்டது.

டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில், கேப்டன் ராகுல், 5 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

மயங்க் அகர்வால் டக்அவுட் ஆக, கிறிஸ்கெய்ல் 10 ரன்களுக்கு காலி. தீபக் ஹுடாவும் 10 ரன்களுக்கு வெளியேற, முக்கிய வீரர் நிக்கோலஸ் பூரானும் டக்அவுட்.

ரன்அவுட் தவிர, இதர 4 விக்கெட்டுகளையும் காலிசெய்தவர் தீபக் சஹார். மொத்தம் 4 ஓவர்களையும் வீசிவிட்ட அவர், 1 மெயிடன்களுடன், 4 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.

தற்போது, ஷாருக்கானும், ஜை ரிச்சர்ட்சனும் ஆடிவருகின்றனர். இவர்கள் இருவரும் ஓரளவு நிலைத்து நின்று ஆடினால், பஞ்சாப் அணி 100 ரன்களைத் தாண்டலாம் என்ற நிலை உள்ளது.