நிர்மலா சீதாராமனின் கூட்டத்தில் நடந்து என்ன?: மத்திய அரசு விளக்கம்

ர்நாடகாவில் வெள்ள சேத ஆய்வின் போது அம்மாநில அமைச்சரிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவத்துடன் நடந்துகொண்டதாக சர்ச்சை ஏற்பட்டது.   இந்நிலையில் அச்சம்பவம் குறித்து மத்திய அரசு   விளக்கம் அளித்துள்ளது.

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ள  நிலவர ஆய்வின் போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்மாநில அமைச்சர் சாரா மகேஷை கடிந்துகொள்ளும் வகையில் நடந்ததாக நேற்று  சர்ச்சை  எழுந்தது.

இந்நிலையில் அதுகுறித்து மத்திய அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “குடகு மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விசாரித்துக்கொண்டிருந்தார்.  அப்போது மாநில அமைச்சர் மகேஷ் இடையில் குறுக்கிட்டு, மாநில அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைத்தார்.

முன்னாள் ராணுவத்தினரின் குறைகளை அறிவது தமது கடமை என்றும், அந்தச்சந்திப்பு தமது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருப்பதாகவும் மத்திய அமைச்சர் எடுத்துக் கூறினார். ஆனாலும்  அந்தச் சந்திப்பை உடனடியாக நிறுத்த மாநில அமைச்சர் நிர்பந்தித்தார்.

இதையடுத்து நிலைமை மோசமடைவதை தவிர்க்கும் வகையில் மத்திய அமைச்சர் தனது சந்திப்பை நிறுத்தி வைத்துவிட்டு அதிகாரிகள் கூட்டத்திற்கு சென்றார். அந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருந்தனர். இது வழக்கத்திற்கு மாறானது

மாநில அமைச்சரின் இச்செயல் எதிர்பாராதது.  மேலும் மத்திய அமைச்சரை பற்றி அவர் தரக்குறைவாக சில வார்த்தைகளை பேசினார். இது மாநிங்களவையின் மாண்புக்கே இழுக்கு” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மேலும், “மத்திய அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பின் போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் என்பவர்கள், பாதுகாப்பு அமைச்சகம் என்ற குடும்பத்தின் ஓர் அங்கம் என்பதை குறிக்கும் வகையில் பரிவார் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். ஆனால் அதுவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” எந்றும் மத்திய  அரசின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது