டிடிவி சட்டமன்றத்திற்குள் நுழைந்தால் என்ன நடக்கும்? தங்கத்தமிழ்செல்வன் தடாலடி

சென்னை,

மிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் கைப்பற்ற எங்களுக்கு குக்கரே போதும் என்றும், டிடிவி தினகரனும், 18 எம்எல்ஏக்களும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை என்று டிடிவி ஆதரவு தங்கத்தமிழ்செல்வன் கூறினார்.

சென்னை ஆர்.கே. நகர்  இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற  டி.டி.வி தினகரன் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ள நிலையில், அவரது தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

டிடிவி தினகரன் இன்று சட்டமன்ற வளாகத்திற்கு  வருவது தெரிந்து அனைத்து அமைச்சர்களும் கோவையிலும், ஊட்டியிலும் தஞ்சமடைந்து உள்ளனர்  என்று கேலி செய்த அவர், . தினகரன் பதவியேற்கும் முன்னரே இப்படி இருந்தால், இன்னமும் சட்டமன்றத்திற்குள் எங்கள் அண்ணனும், 18 சட்டமன்ற உறுப்பினர்களும் நுழைந்தால் என்ன நடக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்று  தடாலடியாக கூறினார்.

மேலும், எங்களால் ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற  குக்கர் சின்னத்திலேயே 234 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்ற தங்கத்தமிழ் செல்வன்,  தற்போதைய அதிமுகவின்  நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்று கூறினார்.

மேலும், எங்களை எதிர்த்தவர்கள் முகத்தில் கரியை பூசிவிட்டு சட்டசபைக்குள் வந்துள்ளார் தினகரன். அனைத்து அதிமுக நிர்வாகிகளும் எங்கள் பக்கம் தான் உள்ளனர். இதை விரைவில் சிலர் புரிந்து கொள்வார்கள் என்றார்.

ரஜினியின் ரசிகர்களுடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், . ரஜினி அரசியலுக்கு வந்தால் இது மிகவும் காலம் கடந்த முடிவு. இப்போது தான் அவருக்கு ஞானோதயம் வந்து உள்ளது. ஆனால், அது வீண் முயற்சி என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் ஜெ.சிகிச்சை வீடியோ குறித்து கூறும்போது,  ஜெ.வீடியோ தினகரனுக்கு தெரியாமல் வெளியிடப்பட்டது தான். அதில் இப்போது குறைகள் கண்டு பிடித்துக்கொண்டு இருக்கிறார் ஆனந்தராஜ்.  அவர் மனதில் எதோ ஜி.டி.நாயுடு என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார் போல தெரிகிறது என்றார்.

தங்கத்தமிழ்செல்வனின் தடாலடி பேட்டி அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.