சென்னை:

மிழகத்தில் பாஜக நிர்வாகிகளான எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அவ்வப்போது பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, நான் சொல்வதுதான் பாரதிய ஜனதா கட்சியின் கருத்து என்று கூறினார்.

கடந்த சில நாட்களாக, கவர்னர் பென் செய்தியாளர் கன்னத்தல் தட்டிய விவகாரம், எச்.ராஜாவின் கனிமொழி குறித்த அவதூறு பதிவு, நேற்றைய எஸ்.வி.சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்த அவதூறு பதிவு போன்ற வற்றால், தமிழக்ததில் பாஜக மீது மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற சர்ச்சை பதிவுகள் காரணமாக பாஜக கட்சி மது அரசியல் கட்சியினர் மன்றுமின்றி சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, எச்.ராஜா,எஸ்.வி.சேகர் போன்றோர் தங்களது வலைதள பதிவுகளை நீக்கி, மன்னிப்பு கோரியுள்ளனர்.

இந்நிலையில், இன்று  செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் “பெண் செய்தியாளர்களை பாஜக மிகவும் மதிக்கிறது. எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அவர்கள் பணிபுரிகிறார்கள் என்பது எனக்கு தெரியும் என்று கூறினார்.

மேலும், பெண் செய்தியாளர்களை  இழிவு படுத்தும் வகையில் சிலர் வெளியிட்ட கருத்துகளை நான் வன்மையாக கண்டித்து நீக்க சொன்னேன். அவர்களும் அதை நீக்கிவிட்டனர்” என்றும், நான் சொல்வது மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் கருத்து மற்றவர்கள் சொல்வது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், எல்லோருடைய போராட் டத்திலும் சுயநலம்தான் ஒளிந்துள்ளது என்ற தமிழிசை  பாஜக மட்டுமே பொதுநலத்தோடு  பணியாற்றுகிறது என்றும் கூறினார்.