ஆஸி., – நியூசி., இரண்டாவது டெஸ்ட் – கள நிலவரம் என்ன?

மெல்போர்ன்: நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களை எடுத்துள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவுசெய்தது.

ஆஸ்திரேலியா துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 41 ரன்களுக்கும், மற்றொரு வீரர் ஜோ பர்ன்ஸ் டக் அவுட்டும் ஆக, மார்னஸும், ஸ்மித்தும் அணியை நிமிர்த்தினார்கள்.

மார்னஸ் 63 ரன்களுக்கு அவுட்டாக, ஸ்டீவ் ஸ்மித் 82 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். அவர் மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ரன்களை எடுக்க அவர் சந்தித்தது 209 பந்துகள்.

மேத்யூ வேட் 38 ரன்களுக்கு அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 30 ரன்களுக்கு ஸ்மித்துடன் களத்தில் நிற்கிறார். மொத்தம் 2 நாள் ஆட்டம் முடிந்துள்ளது.

நியூசி., தரப்பில் காலின் கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.