3 வருடத்தில் சாதித்தது என்ன? மோடிக்கு அகிலேஷ் கேள்வி

லக்னோ,

த்திய பிரதமராக மோடி பதவி வகித்த 3 வருடங்களில் சாதித்ததுஎன்ன? அவர் சாதித்ததை சொல்ல முடியுமா என உ.பி. முதல்வர் அகிலேஷ் கேள்வி விடுத்துள்ளார்.

இந்தியாவின் அதிக தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டதேர்தல் பிப்ரவரி 11ந் தேதி தொடங்கி கடைசி கட்ட தேர்தல் மார்ச் 8ந்தேதி முடிவடைகிறது.

இன்று  6வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. கடைசி கட்ட தேர்தல் மட்டுமே பாக்கி உள்ளது.

கடைசி கட்ட தேர்தலையொட்டி அங்கு மத்திய, மாநில கட்சிகளின் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியும், தற்போது உ.பி.யை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் முதல்வரான அகிலேஷ் யாதவும் இணைந்தே பிரசாரம் செய்து வருகிறார்கள்.

வரும் 8-ந்தேதி நடைபெற இருக்கும்  கடைசி கட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. கடைசிகட்ட தேர்தல் என்பதால் மோடி, அகிலேஷ், ராகுல், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் பாதோகி பகுதியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

எனது ஆட்சியில் நான் பல நற்பணிகளை செய்து இருக்கிறேன். அதுபோல நீங்கள் செய்த (மோடி) ஒரு பணியை உங்களால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், எனது 5 வருட ஆட்சியில் நான் செய்த செயல்கள் குறித்த அறிக்கையை அளிக்க நான் தயாராக உள்ளேன். அதுபோல மத்தியில் நீங்கள் செய்த 3 வருட கால ஆட்சியின் அறிக்கையை உங்களால் சமர்ப்பிக்க முடியுமா? என்றார்.

மேலும்,  வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக  நான் கேள்விப்பட்டேன். அந்தப் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்