பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அறிவிப்பைக் கேளுங்களேன்…!

பாட்னா: வெளிமாநிலங்களிலிருந்து பீகார் திரும்பும் தொழிலாளர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அந்த 21 நாட்கள் முடிந்து வீடு திரும்புபவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

அவர் கூறியதாவது, “பிற மாநிலங்களில் இருந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக, சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு நன்றி.

பீகார் மாநிலம் திரும்பும் தொழிலாளர்கள் யாரும் ரயில் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும், பீகார் வரும் தொழிலாளர்கள் 21 நாட்கள் மாவட்ட முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இதனைத் தொடர்ந்து, 21 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்” என்றுள்ளார்.

ஆனால், தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து, 21 நாட்கள் தனிமைப்படுத்தலிலும் இருந்துவிட்டு வரும் தொழிலாளர்களுக்கு ரூ.1000 எம்மாத்திரம் என்ற குரல்களும் கேட்கின்றன.