நோய்மைக்கலக்கம் என்றால் என்னவென்று பார்ப்பதற்குப் முன்பு உங்களுக்கு கீழ்கண்டப்பழக்கம் இருக்கிறதா? என்று பாருங்கள்

உங்களுக்கு ஏதேனும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டால் அந்த குறிகுறிகளை வைத்து இணையத்தில் அது குறித்து தேடுகின்றீர்களா?

மருத்துவர் உங்களுக்குக் கொடுத்த மருந்து,மாத்திரைகளை இணையத்தில் தேடுகின்றீர்களா?

இணையத்தில் தேடும்போது மருத்துவர் உங்களுக்குக்கொடுத்த மாத்திரையின் பின்விளைவுக்களை கண்டு உடனடியாக மருந்தினை நிறுத்திவிடுகிறீர்களா?

உங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்கோளாறின் அறிகுறிகளைக்கொண்டு இணையத்தில் நீங்களாகவே மருந்தினை, மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துகின்றீர்களா?

மேலே உள்ள எல்லாவற்றுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால் நோய்மைக்கலக்கம் என்ற நோய் உங்களுக்குத்தான்

cyberchondria, Internet Derived Information Obstruction, Dr.Google என பல வகையான பெயர்களுக்கு இதற்கு உண்டு

இணையம் என்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால் அதை பயன்படுத்துவர்களின் கையில்தான் அதன் வசம் உள்ளது, தனக்கு ஒரு நோய் அறிக்குறி ஏற்பட்டால் அதை அதீத முன்னெச்சரிக்கையாக்கருதி இணையத்தில் தேவைக்கு அதிகமான  தகவல்களை சேகரித்து அந்தத் தகவல்களின் மூலம் மனக்குழப்பம் ஏற்பட்டு நோய்க்கு சிகிச்சை செய்யும் மருத்துவரை அணுகும்போது அது குறித்து அதீத கேள்விகள் எழுப்பபடுவதும், அவர் கொடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதில் பயம் , தயக்கம், நோய்க்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவரால் வழங்கப்படும் சிகிச்சை செய்வதற்குக் கூட தடையாக இருப்பது, நிபுணத்துவம் பெற்றம் மருத்துவர்களிடம் அதைத்தாண்டி அதிகமான கேள்விகளை கேட்டு அந்த மருத்துவத்தை முறையாக பின்தொடர்வதில்லை,. தானாகவே நிறுத்திக்கொள்வது

மேற்கண்ட அனைத்துமே உங்களுக்கும் ஏற்படும் நோய்மைக்கலக்கம் ஆனால் உண்மையில் மருத்துவர்களின் உங்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை நேரில் பார்ப்பதுடன், அவர்களுக்குத் தேவையான தகவல்களை உறுதி செய்ய சில சோதனைகளையும் எடுக்கிறார்கள். அதை உறுதி செய்தபின்பே உங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவை சரி செய்ய மருந்துகள் வழங்குவார். ஆனால் நாமோ இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை அதிகமாக தெரிந்துகொண்டு அதில் ஏற்படும் பயத்தின் காரணமாக  மருத்துவ நிபுணரை நம்பாமல் தானாகவே மருந்துகளை எடுத்துக்கொள்வதும், ஏற்கனவே மருந்துகளை நிறுத்துவம், நோயினால் ஏற்படக்கூடிய பயமும் நோய்மைக்கலக்கமாகும்

எனவே இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் உங்களுக்கு பொதுவாக, மருத்துவர்களுக்கு அனுபவமாகவும் தெரியும். எனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசித்த பின்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி
9942922002

—செல்வமுரளி