மன்கேடிங் என்றால் என்ன ? : முழு விவரம்

ஜெய்ப்பூர்

நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் அஸ்வினால் மன்கேடிங் மூலம் ரன் அவுட் ஆகிய ஜோஸ் பட்லர் குறித்த செய்திகள் ஏற்கனவே வந்துள்ளன. இங்கு அதன் முழுவிவரமும் காண்போம்.

கிரிக்கெட்டில் மன்கேடிங் (MANKADING) என ஒரு விதிமுறை உண்டு. இதன்படி பவுலர் ஓடி வந்து பந்து வீசும்போது பவுலர் பந்து வீசும் முன்பே பேட்டிங் செய்யாதவர் ஓடத் தொடங்கக் கூடாது.

அப்படி அவர் ஓடினால் அந்த பந்தை வைத்து பவுலர் தனது அருகில் உள்ள விக்கட்டை வீழ்த்த முடியும்.   அவர் அந்த விக்கட்டை வீழ்த்தினாலும் வீழ்த்தாவிட்டாலும் அதுவும் ஒரு பந்து வீச்சாகவே கருதப்படும்.

வழக்கமாக பவுலர் எச்சரிக்கை மட்டுமே கொடுப்பார்.

கடந்த 1947 ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த போது வினோத் மன்கட் பந்து வீசும் போது ஓட முயன்ற பில் பிரவுனுக்கு இரு முறை எச்சரிக்கை கொடுத்தார். மூன்றாம் முறை விக்கட்டை வீழ்த்தினார்.

இதற்கு ஆஸ்திரேலிய அணி தலைவர் டான் பிராட்மேன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனினும் ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இதை விளையாட்டு வீரர்களுக்கு எதிரானது என விமர்சனம் செய்தது. அன்று முதல் இந்த விதிக்கு மன்கேடிங் என பெயர் சூட்டப்பட்டது.