பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது வரம்பு மீறிய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையல் சிக்குபவர்.

தற்போது, “ஜல்லிக்கட்டு விளையாட்டை ஆதரிக்கும் தமிழர்கள் பொறுக்கிகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

சரி, “பொறுக்கி” என்றால் என்ன அர்த்தம்?

தமிழ் அகராதி என்ன சொல்கிறது?

பொறுக்கி என்பதற்கு, ஒழுக்கமற்றவன், தறுதலை, போக்கிரி, நக்குப்பொறுக்கி, எச்சிற்பொறுக்கி உண்போன் என்று பல பதங்களைச் சொல்கிறது தமிழ் அகராதி.

ஆனால்இ ”இனி “பொறுக்கி” என்றால், சுப்பிரமணியன் சுவாமிதான் நினைவுக்கு வருவார்” என்று சமூகவலைதளங்கலில் பலரும் எழுதி வருகிறார்கள்..