இப்போது சமூகவலைதளங்களில் மந்திரம் ஒலிக்கும்.. ஸாரி.. பதியும் பெயர் மெர்சல், மெர்சல், மெர்சல்தான். இந்த படத்தை ஆகோ ஓகோ என்றோ அல்லது கலாய்த்தோ பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஆனால் பலருக்கும் புரியாத விசயம்.. மெர்சல் என்றால் என்ன அர்த்தம் என்பதுதான். இதற்கு வட சென்னை காரரும் அதே நேரம் சினிமாக்காரராகவும் இருப்பவரிடம் கேட்கலாமே என்று தோன்றியது.

“மெர்சலாயிட்டேன்…” என்ற பாடல் நினைவிருக்கிறதா? ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் இடம் பெற்ற பாடல். ஏ.ஆர்.ரஹ்மான் அப்போது சூப்பர் ஹிட் ஆன பாடல் இது. ஆகவே, , ‘மெர்சல்’ என்றால் என்ன அர்த்தம்? என்று அப்பாடலை எழுதிய கபிலனிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “சென்னை புறநகர் பகுதியின் வட்டார வழக்குச் சொல்களில் ஒன்று ‘மெர்சல்’ என்ற வார்த்தை. இதற்கு மயங்குதல் என்று பொருள் கொள்ளலாம்!” என்றார். அது சரி எதுக்காக ரஜினிகூட கபிலன் இருக்கிற படம்னு கேட்கறீங்களா.. ரஜினியை பார்த்தே.. அதாம்பா, நியூஸ்ல பார்த்தே ரொம்ப நாளாச்சுல்ல.. அதான்!