ரெட் அலர்ட் என்றால் என்ன ? வானிலை ஆய்வு மையம் கூறும் விளக்கம்    

மீபகாலமாக கனமழை என்றாலே மஞ்சள் அலர்ட்,  ஆரஞ்ச் அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் என்பது மாதிரியான வார்த்தைகள் புழங்க ஆரம்பித்திருக்கின்றன.

தற்போது தமிழகத்தில் மழை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டிருக்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் என்று அறிவித்திருப்பதாக பல தொலைக்காட்சிகளில் பிளாஷ் மற்றும் முக்கிய செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பினர். இது பலரிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், அச்சப்படத்தேவையில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பல வண்ண “அலர்ட்” (எச்சரிக்கைகள்) குறித்து நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட்கள். நான்கு வித்தியசமான அலர்ட்கள் உண்டு.

அவை, பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.

பச்சை எச்சரிக்கை (Green Alert) :  பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் அஞ்சத் தேவை இல்லை.

மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) : வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற சமயங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அம்பர் எச்சரிக்கை (Amber Alert) : பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுக்கும். இது போன்ற சமயங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது  நலம்.

சிவப்பு எச்சரிக்கை (Red Alert) : மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த சூழலில், போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யக்கூடு.

கேரளாவில் ஆகஸ்ட் 12ம் தேதி அங்கிருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. வருகின்ற 7ம் தேதி தமிழகம் மற்றும் கேரள மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என்று கணித்த வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கைகளைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. சூழலுக்கேற்ப முன்னேற்பாடுகளை செய்துகொண்டால் போதும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: what-is-red-weather-alert-know-everything-about-red-weather-warning, ரெட் அலர்ட் என்றால் என்ன ? வானிலை ஆய்வு மையம் கூறும் விளக்கம்
-=-