ஒரு ரபேல் விமானத்தில் விலை என்ன?…ராணுவ அமைச்சருக்கு ராகுல்காந்தி கேள்வி

டில்லி:

ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை என்ன? என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மரியாதைக்குரிய ராணுவ அமைச்சரே, உங்கள் குரலை பிரதமர் அமைதியாக்கியது வெட்கப்பட வேண்டியதாக உள்ளது. தயது செய்து பதிலளியுங்கள்…

1. ஒரு ரபேல் போர் விமானத்தின் இறுதி செய்யப்பட்ட விலை என்ன?

2. பாரிசில் விமானம் வாங்குவதற்கு முன், பிரதமர் மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதலை பெற்றாரா?.

3. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனத்தை பிரதமர் புறக்கணித்து, பாதுகாப்பு துறையில் அனுபவமில்லாத தொழிலதிபருக்கு வழங்கப்பட்டது ஏன்?,’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“ராணுவ அமைச்சரே பதில் சொல்லுங்கள்”…… என்ற ஹாஷ் டேக் மூலம் ட்விட்டரில் இன்று காங்கிரஸ் கட்சியினரால் பரவலாக ட்வீட் செய்ய பட்டது. #RakshaMantriJawabDo