‘இந்து தீவிரவாதம்’ குறித்த சர்ச்சைக்கு கமல் சொன்ன பதில் என்ன?

சென்னை,

னது பிறந்தநாளையொட்டி  தி.நகர் ஓட்டலில் நடைபெற்ற நற்பணி மன்ற விழாவில், 3 மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தி பேசிய கமல், அரசியல் கட்சி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இந்து தீவிரவாதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கமல், நாத்திகன் என்று சொல்வதை விட பகுத்தறிவாளன் என்று சொல்வதையே விரும்புகிறேன் என்றார்.

இந்துக்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருபோதும கருத்துக்களை முன் வைத்தது இல்லை. எனது வீட்டிலும் இந்து மக்கள் இருக்கிறதார்கள் எனன்தை அறிந்துதான் எனது கருத்துக்களை முன் வைக்கிறேன் என்றார்.

தான் ஒருபோதும் சமூகம் பார்த்து  நட்பு பாராட்டுவது கிடையாது,  யாரையும் காயப்படுத்த  மாட்டேன்  யாரையும் காயப்படுத்துவது என் பணியல்ல என்று கூறினார்.

என்னை இந்து விரோதி என்று சிலர்  கூறுகிறார்கள். நான் பிறந்தது நான் பிராமண சமூகத்தில்தான். என் பெற்றோர், உறவினர்கள் அனைவரும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதை யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது என்றும்,  எனக்கு அனைத்து சமூகத்திலும் என நண்பர்கள் உண்டு என்றும்  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.