தைத்திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக்க் கொண்டாடப்படுகிறது.

இதில் முக்கிய நிகழ்வு பொங்கல் வைப்பது.  இதற்கான உகந்த நேரம் எது?

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாத பிறப்பு தர்ப்பணமும் சேர்ந்தே வரும். பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது மற்றும் மாத பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது என்று பலருக்கு சந்தேகம் ஏற்படும்.

தை 1ம் தேதி (14.01.2015) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் வைக்கலாம் அல்லது 11.00 முதல் 12.00 மணிக்கு குரு ஹோரையில் வைக்கலாம்

உத்தராயணம் புண்யகால (தை மாத பிறப்பு) தர்ப்பணம் எப்போது?

காலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனையும் அடையலாம்) குளித்து விட்டு உத்தராயண புண்யகால தை மாத பிறப்பு பிதுர் தர்ப்பணத்தை செய்வது சிறப்பு.

கணு பொங்கல் நேரம்!

சகோதரர்கள் நலமுடன் வாழ, அன்புடன் சகோதரிகள் வைக்கும் பொங்கல், நாளை. அதாவது பொங்கல் பண்டிக்கைக்கு மறுநாள். இதற்கு கணு பொங்கல் என்று பெயர்.

அன்று (திங்கள் – 15.01.18)  சுக்கிர ஓரை பார்த்து, கணு பொங்கல் வைப்பது, மிகுந்த பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.

நாளை காலை 5.40 முதல் 6.40 மணி வரை சுக்கிர ஓரை. இந்த நேரத்தில் கணு பொங்கல் வழிபாடு செய்ய வேண்டும்.

மேலும் இந்த நாளில், கோ பூஜை செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும்.

கோபூஜை செய்ய இயலாதவர்கள், பசுக்களுக்கு  அகத்திக்கீரை வழங்கி வழிபட்டாலும் நல்ல பலன் உண்டு.