காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவனைக்கு கொண்டுவந்தபோது வழியிலேயே மரணமடைந்தார்.குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்சு அளிக்காமல் 7 மணி நேரம் தாமதப்படுத்தி ஆம்புலன்சு வந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது.

இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

இதுகுறித்து , மருத்துவத்துறை இயக்குநர் இன்பசேகர் தலைமையில் விசாரணை நடை பெற்றது. அதில், ஆம்புலன்ஸ் பிரேக் டவுன் ஆனதால் குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடிய வில்லை என்றும், அதன் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக கூறியுள்ளார்.

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் சரிகா இவரின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார்.

ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானால், மாணவி சென்னை அழைத்துவரப்பட்டபோது, வழியிலேயே உயிரிழந்தார்.

உரிய நேரத்தில் மருத்துவ நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததே உயிரிழப்பிற்கு காரணம் என அந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மருத்துவத்துறை இயக்குநர் இன்பசேகர் தலைமையில் காஞ்சிபுரம் மருத்துவ மனையில் விசாரணை நடைபெற்றது.

உயிரிழந்த சிறுமிக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்த பணிமருத்துவர், செவிலியர்கள், மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட தாகவும்,  விசாரணை முடிவில், மாணவி சரிகாவுக்காக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், வரும் வழியில் பிரேக்டவுன் ஆனதால் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர முடியவில்லை. இதன் காரணமாக மாணவியை சென்னை கொண்டு வர தாமதமாகி உள்ளது. இந்நிலையில் வரும் வழியில் மாணவி சரிகா உயிரிழந்தார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.