டோக்லாமில் சீனா ஆக்கிரமிப்பு… என்ன செய்கிறது மத்திய அரசு?: காங்.   கேள்வி

டில்லி:

டோக்லாம் அருகே சீன படை ஆக்கிரமிப்பை தடுக்க மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

‛‛ டோக்லாம் அருகே, இந்திய எல்லைக்குள் மீண்டும் சீன படை  ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர், சுஷ்மாவும், இந்த விஷயத்தை மறைத்து, நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில், மத்திய அரசு, சமரசம் செய்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.” என்று ரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.