சென்னை:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  77  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று மாலைச் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் இன்று புதிதாக  77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில், இதுவரை மொத்தம் 44 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களில் 22 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இன்று ஒருவர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாகவும், 71 வயது மூதாட்டியான அவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்றும், இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது நிலையில் தான் உள்ளது என்று கூறியவர், இதுவரை  சமூகப் பரவல் இல்லை என்றும்,  கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் குடும்பத்திற்கும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். கொரோனா பாதித்த 5 பேர் மூலம் 72 பேருக்கு பரவயது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது அமலில் உள்ள  ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான அரசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படு கின்றன

பொதுமக்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன.

ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஓரிரு நாளில் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றவர், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவு உள்ளன. மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களைப் பொறுத்த வரை மத்திய அரசை நம்பி தமிழகம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் பலதரப்பினரிடம் கருத்துகளை கேட்டு வருகிறார். நோய் கட்டுக்குள் வந்தால்தான் பிரச்சனை தீரும் என்பதால், முதல்வர் கவனமாக பரிசீலித்து வருகிறார். நாளை பிரதமருடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பார் என்று கூறினார்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்