மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. சொத்து மதிப்பு என்ன? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை:

றைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதா சொத்து எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி என்பவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குறித்து கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஏற்கனவே இது தொடர்பாக ஜெ.தீபக் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின்  போயஸ்  கார்டன்  வேதா இல்லம் 1 ஏக்கர் அளவிலானது. தற்போதைய அதன் மதிர்ப்பு  100 கோடி ரூபாய்  என  உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில்,  ஐதராபாத் திராட்சைத் தோட்டம், கொடநாடு எஸ்டேட், உட்பட ஏராளமான சொத்துக்கள் ஜெயலலிதா பெயரில் உள்ளன. போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு உட்பட ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.913 கோடி இருக்கும். ஆனால் தனது சொத்துக் களை யார் பராமரிக்க வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. விசார ணையை தொடர்ந்து, ஜெயலலிதா சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு?  அவருக்கு கடன் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும், தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள்

மேலும் ஜெயலலிதா சொத்து தொடர்பாக  அமலாக்க துறை, தமிழக அரசு ஆகியவை பதில் தெரிவிக்க வேண்டும் என்றும்,  சென்னையில் உள்ள போயஸ் தோட்ட ஜெயலலிதா வீடு  நினைவு இல்லமாக மாற உள்ளதால், அதுகுறித்து தமிழ்வளர்ச்சித்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் வரும் 6ந்தேதிக்குள் பதிலளிக்கவும்  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இதன் காரணமாக சொந்த பந்தங்கள் இன்றி வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் சொத்துக்கள் விவரம் விரைவில் பொதுமக்களுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படு கிறது.