கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை – கிடைத்த நன்மை என்ன?

புதுடெல்லி: தொழில்துறை முன்னேற்றம் என்ற காரணத்தை முன்வைத்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகளால் முதலீட்டு சுழற்சியை மீண்டும் துவங்க முடியவில்லை என்று ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

அதேசமயம், இந்தச் சலுகையின் மூலம் நிறுவனங்கள் தங்கள் கடனைக் குறைத்துக் கொள்ளவும், நிதி சமநிலையைக் கட்டமைக்கவும் சாத்தியப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், முதலீட்டு நடவடிக்கை பலவீனமாக இருந்தாலும்கூட, சொத்தைப் பணமாக மாற்றுதல் மற்றும் பிரதான துறைமுகங்களை தனியார்மயமாக்குதலின் மூலம் திரட்டப்படும் “இலக்கிடப்பட்ட பொது முதலீடு” ஆகியவற்றின் மூலம் பொருளாதாரத்தை சீராக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பொருளாதாரத்தில் முதலீட்டு தேவை மற்றும் முதலீட்டு செலவினம் குறித்த பலவீனத்தைக் குறிப்பிடுகையில், அரசால் முன்னெடுக்கப்படும் முதலீட்டு மறுமலர்ச்சி தேவைப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.