8 மாநிலங்கள் – பிற்பகல் 1 மணிவரையான நிலவரம் என்ன?

புதுடெல்லி: நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், மொத்தம் 8 மாநிலங்களில், பிற்பகல் 1 மணிவரை பதிவான வாக்குகளின் சதவிகிதம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

பீகார் – 36.20%
இமாச்சலப் பிரதேசம் – 34.47%
மத்தியப் பிரதேசம் – 43.89%
பஞ்சாப் – 36.66%
உத்திரப் பிரதேசம் – 36.37%
மேற்கு வங்கம் – 47.55%
ஜார்க்கண்ட் – 52.89%
சண்டிகர் – 35.60%

நாடாளுமன்ற தேர்தலில், இது ஏழாவது கட்ட வாக்குப் பதிவாகும். வாக்குகள் அனைத்தும் வரும் 23ம் தேதி எண்ணப்படவுள்ளன. அதேசமயம், விவிபேட் சீட்டு விபரங்களும் ஒப்பிடப்படுவதால், முழு விபரங்களும், 24ம் தேதி காலையில்தான் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.