சென்னை,

மிழகத்தில் இருந்து பத்ம விருதுக்கு தேர்வானவர்களில் ஒருவர் ராஜகோபாலன். இவரைபற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யார் இந்த ராஜகோபாலன்…

2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு  அறிவித்துள்ளது. இதில், தமிழகத்தில்  நான்கு பேர் இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்னர். அதில்,  இசைஞானி இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருதும், மதுரையை சேர்ந்த ராஜகோபால் வாசுதேவனுக்கும், நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கும் பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் ராஜகோபாலனும், ஞானாம்பாளும் வெளிஉலகுக்கு அறிமுகமாதவர்கள்.  தற்போதுதான் அவர்களை பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளது. ஞானாம்பாள் இந்த வயதிலும் யோகா செய்தும்,  மற்றவர்களுக்கு கற்பித்தும்  உடல்நலத்தை பேணி வருகிறார்.

அதுபோல ராஜகோபாலனும், புதிய கண்டுபிடிப்புக்காக பத்மஸ்ரீ விருதுக்கு தெர்வு செய்யபட்டுள்ளார்.  மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் துறை தலைவரும், அறிவியலாளருமான ராஜகோபாலன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் சாலை அமைப்பது குறித்த ஆராய்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

பிளாஸ்டிக் சாலை அமைப்பது குறித்த செய்தியை கேள்விப்பட்ட அவர், பல ஆண்டுகளாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  பிளாஸ்டிக் கழிவுகளால், பிளாஸ்டிக் கற்கள் தயாரிப்பது குறித்தும் கண்டுபிடித்துள்ளார். ’பிளாஸ்டோன்’ எனப்படும் பழைய கழிவுகளை கொண்டு  தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் சாலை அமைத்து சாதனை படைத்தார்.

இந்த சாலைகள்  மழை மற்றும் குளிரை தாங்கும் விதத்திலும்,  உயர் அழுத்தத்தை தாங்கும் விதமாகவும்,  நீரினால் அழியாத வகையிலும் , திடக்கழிவு மேலாண்மையில் சிறந்துவிளங்குவதுடன் அந்த சாலைகளும் தரமானதாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து நாடு முழுவதும் பிளாஸ்டிக் சாலை அமைப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று கடந்த 2015ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.

இந்த கண்டுபிடிப்புக்காகவே  அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.