பிரிஸ்டல்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய பேட்டிங் நட்சத்திரம் டேவிட் வார்னர் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 32 வயதாகும் டேவிட் வார்னர், இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. மேற்பகுதி கால் காயம்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா கோப்பை வென்றது. அத்தொடரில், 345 ரன்கள் அடித்த வார்னரின் சராசரி 49.28% ஆகும்.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக, ஸ்டீவன் ஸ்மித்துடன் சேர்ந்து, ஒரு ஆண்டுகாலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்ட வார்னர், ஒரு மாதத்திற்கு முன்னர் மீண்டும் களத்திற்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.