இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் – நிலவரம் என்ன?

கேப்டவுன்: இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களை எடுத்துள்ளது தென்னாப்பிரிக்கா.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்த இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் போப் ஆகியோர் சதமடிக்க, கிராலே, மார்க் உட் மற்றும் சாம் குரான் ஆகியோர் 40 ரன்களுக்கு மேலாக எடுக்க, 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 499 ரன்களோடு டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், இரண்டாவது நாள் முடியும் நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய தென்னாப்பிரிக்கா, மாலன் மற்றும் ஹம்சா ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணி 60 ரன்களை எடுத்திருந்தபோது ஆட்டம் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. துவக்க வீரர் டீன் எல்கர் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தென்னாப்பிரிக்க வந்துள்ள இங்கிலாந்து அணி, தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போதைய நிலையில், தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.