சென்னை,

மிழகத்தில் இதுவரை நடைபெற்ற வருமான வரி சோதனைகளின் நிலை என்ன என்றும், அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

சிகலா குடுபங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையை தொடர்ந்து நேற்று இரவு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை நடைபெற்றது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் அதிமுக தொண்டர்களிடையே ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர், அன்புநாதன், சேகர் ரெட்டி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் நடந்த வருமான வரி சோதனையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்களிடமிருந்து என்னென்ன கைப்பற்றப்பட்டன? அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் படி எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், என்ன காரணத்திற்காக இந்த சோதனை எல்லாம் நடத்தப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.

முதலில் இதுவரை நடந்த வருமான வரி சோதனைகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பார்ப்போம். அதன்பிறகு தற்போது நடக்கும் சோதனையை பற்றி கருத்து கூறுவதாக தெரிவித்தார்.

மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் இந்திய கடற்படை பயன்படுத்தும் வகை அல்ல என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது மீனவர்களை கொச்சைப்படுத்தும் செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.