அநாதகச் சக்கரம் – மருத்துவர் பாலாஜி கனக சபை , பகுதி 4

ற்கனவே நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் பற்றி பார்த்து இருந்தோம். இது நெஞ்சுக்குழியில் இருதயத்துக்கும், நுரையீரலுக்கும் அருகாமையில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிகளைக்குறிக்கும் சக்கரம் அநாதகச்சக்கரம்.

இது T7 முதுக்கெலும்புப்பகுதியில் சூட்சுமமாக அமைந்துள்ளது. இந்தச்சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு, காதல், படைப்பாற்றல், கருணை ஆகியவற்றைக்குறிக்கும் சக்கரமாகும்

அன்பும், காதலும் இதயத்தினைத்தான் நம் உருவமாக்கிவைத்திருக்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

இப்பகுதியில் பிராண சக்தி (Life Force) என்ற உயிர் ஆற்றல் அதிகமாக இருக்கும். இரத்த ஓட்டம், காற்றோட்டம் அதிகம் இருக்கும் பகுதியாகும். இது இருதயத்துடிப்பு, உயிரின் இயக்கம், நுரையீரலின் பிராண பரிமாற்றம் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சக்கரமாக விளங்குகிறது.

குறிப்பாக உறவுமுறைகளில் வருகின்ற மனப்போராட்டங்கள் இக்சக்கரைத்தினைக்கொண்டே அமைகிறது. குறிப்பாக பூர்வ ஜென்ம தொடர்புகளாக  நாம் வாழும் காலத்தில் சிலரை மட்டுமே நெருங்கிப்பழகும் தன்மை நம்மிடம் இருக்கும்,. சிலரை மனதால் காரணமின்றி அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளவும் பூர்வஜென்ம பந்தகங்களும், இச்சக்கரத்தில் தியானம் செய்தால் கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் கூறுவர் மேலும் மனதால் காயப்படுதல் , மற்ற இர வீக்கம்அதிர்ச்சிகளை இச்சக்கரத்தில் தியானம் செய்வதன் மூலம் குணப்படுத்தலாம். மேலும் மன நோய்களும் குணமாகும்.

அனைத்து உயிரிடத்திலும் கருணை மேம்படும், உறவுகளும் மேம்படும்

பாரப்பா பூரகத்தின் மேலேகேளு
பாடுகிறோ மெட்டங்குலந்தா னனாகததின்வீடு
தேர்ந்தயிதழ் பன்னிரெண்டாய் சுற்றிநிக்கும்
ஏரப்பா தேயுவது யிருப்பிடமாய் நிற்க்கும்
பிருப்பிடத்தில் சிகாரமென்ற எழுத்தாமே
எழுத்தான பூதமதின் பீஜங் கேளு
இயம்புவேன் யமதுவும் மிடமேயாகும்
செத்தான அவ்வெழுத்தில் ருத்ரன்காகினிதானே.

அகத்தியர் பாடல்

ஆமென்ற சிகாரத்தின் நெழுத்து நடுவாகும் ஆண்மையாம் பூதமதுதேயு தானாம் தேனென்ற செம்மைநிற சிவப்புமாகும் தேயுவுட பீசமது நவ்வுமாகும் ஒம் மென்ற ஒளிகோடி பானுவாகும் ருத்ரணும் ருத்ரியும் நடுவே நிற்பார் கோமென்ற அவருடைய குணமே தென்றால் கொடும் பொசிப்பு, சோம்பலோடு பயமும்தூங்கே – போகர் வயித்திய காவியம்1000 பாடல் 50

– போகர்

எனவே சிறந்த யோகா குருவின் மூலம் தியானம் செய்து உங்கள் ஆயளையும் நீடியுங்கள்

மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கல்லாவி (போச்சம்பள்ளி)
99429-22002

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Anahata chakra, Dr.Balaji Kangasabai
-=-