மணிப்பூரகச் சக்கரம்-3: மருத்துவர் பாலாஜி கனகசபை!

மூலாதாரத்தில் இருந்து மூன்றாவது சக்கரமாக விளங்குகிறது.  10 தாமரை இதழ்கள் கொண்ட சக்கரமாக கூறப்படுகிறது. இது நாபிச் சக்கரம், தொப்புள் குழியில் குறிக்கும் சக்கரமாகவும் விளங்குகிறது

இது இடும்பு எலும்பு எல் 2- இருக்கிறது. பிரம்ம மந்திரம் என்று கூறப்படுகிறது. சூட்சும நுழை வாயில் என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்ம மந்திரம் வழியாக குண்டலினி சக்தியை கடவுளிடம் ஐக்கியமாக இச்சக்கரம் விளங்குகின்றது.  இது தொப்புக்கொடி உந்திக்சக்கரம் என்றும் சொல்லப் படுகிறது. இதற்கு கீழே 300 இரத்த நாளங்கள் ஓடுங்குகின்றது. மேலே 400 இரத்த நாளங்கள் ஓடுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது. தொப்புளில் துவங்கும் பிரதான இரத்தக்குழாய்கள் நான்கு உந்திச்சக்கரத்தில் இயங்குகிறது.

இச்சக்கரத்தினால்  அமிலங்கள் சுரந்து குடல் உறிஞ்சுகளை நன்கு உரிய செய்து ஜீரண மண்டலத் தின் தன்மைகளை சரியாக செயல்பட உதவுகிறது

வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமானத்துக்கு உதவும் உதாணன் என்ற வாயு செயல்பட உதவுகிறது.
மேலும் பசி தாகம் உண்டாக்குகிறது , கருவுறுவாதலை சீர் செய்கிறது,  பெண்களுக்கு உதவும் மகோதகம் எனப்படும் வயிறு வீக்கம் உண்டாவதை இச்சக்கரம் தடுக்கிறது.

அக்காலத்தில் மகோதகத்தை சரி செய்ய ஈரத்துணியுடன் கோயிலில் அங்கபிரதட்சணை குறிப்பாக பெண்கள் செய்து வந்தார்கள் இதனால்  வயிற்றின் வீக்கம் இயற்கையாகவே சரியானது.
விஸ்வேந்திரி, விளம்பினி, மேதை, சரஸ்வதி நாடி என்றும் இச்சக்கரத்தினை கூறுகிறார்கள்
திடீர்பயம், புனித ஆன்மாக்களின் தொடர்பு, சூட்சுமப்பயணம்( கூடுவிட்டுகூடு பாய்தல்) போன்றவை இச்சக்கரத்தினால்சித்தர்கள் மேற்கொண்டனர்.

ஆன்மீகத்தில் விஷ்ணுவின் நாபியில்இருந்து பிரம்மா பிறந்ததாக குறிப்பிடப்படுகின்றது
இச்சக்கரம் மனிதனுடைய சூட்சுமா உடலுக்கு நெருங்கிய தொடர்பு உடையதாக கருதப்படுகிறது

சித்தர் பாடல்

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பர நாதம் விந்து தனி நாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே

மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கல்லாவி (போச்சம்பள்ளி)
99429-22002

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: balaji kangasabai, Manipooragam chakra
-=-