சுவாதிஷ்டான சக்கரம் – பகுதி 2 : மருத்துவர் பாலாஜி கனகசபை

சென்ற வாரம் மூலாதாரம் பற்றி பார்த்தோம். இவ்வாரம்  சுவாதிஷ்டன சக்கரம் பற்றி பார்ப்போம்

முந்தைய பாகம் படிக்க
https://www.patrikai.com/what-is-this-muladhara-chakra-dr-balaji-kangasabai/

சுவாதிஷ்டன சக்கரம் – 6 இதழ் தாமரை வடிவம் கொண்ட இது  அடிவயிற்றில் இருக்கும் சக்கரமாகும். இது மூலதார சக்கரத்துக்கு மேலே இருக்கும் சக்கரமாகும். அடிவயிற்றுப்பகுதியில் பின்புறமாக இருக்கும் (Sacral bone 3) இடத்தில் சூட்சுமமாக அமைந்திருக்கும் சக்கரம்.

இதில் இடங்கலை, பிங்கலை எதிரெதிரே சந்திப்புகளை உருவாக்குகின்றது. இது நீர் மற்றும் காற்று தத்துவம் கொண்டதாக அமைகிறது. இச்சக்கரத்தில் மல உணர்வு , சிறுநீரக உணர்வு, கர்பப்பையில் கருத்தரிக்கும் உணர்வுகள் இச்சக்கரத்தில் இடம்பெறுகிறது.

மனிதனின் இடம்பெருக்க உறுப்புகள் இச்சக்கரத்தில் அடங்கும். சினைப்பை, வித்துப்பை போன்றவையும் அடக்கம்

தச வாயுக்களில் அபான வாயுவான மலக்குடலை இயக்கி மலத்தினை வெ ளியேற்றுவது மூத்திரம் வேர்வை , போன்றவைகளை வெ ளியேற்றுவது போன்றவையை இச்க்கரம் மேலாண்மை செய்கிறது

பால் உணர்வு, ஆசை இவைகள் இச்சக்கரத்தில் இடம்பெறுகிறது

இச்சக்கரத்தில் பாதிப்ப ஏற்பட்டால் அதற்கான நோயும் நமக்கு ஏற்படும், எனவே உரிய குருவின் மூலம் தியான பயிற்சியை செய்து வருவதன் மூலம் உடலில் உள்ள இச்சக்கரத்திலும், அனைத்துச்சக்கரங்களிலும் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி ஜீவ காந்த ஆற்றலை(நல்ல ஆற்றலை) அதிகப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.

மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கல்லாவி
99429-22002

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dr.Balaji Kangasabai, svaadhishtaana' chakra
-=-