ழைக் காலங்களிலும், தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களிலும் டிஎம்சி என்ற வார்த்தை சரளமாக பயன்படுத்தப் படுவதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம்…

காவிரியில் இவ்வளவு டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டுள்ளார்கள், அணையில் இருந்து இவ்வளவு டிஎம்சி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்படுகிறது… குடிநீருக்காக இவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என்பது குறித்தும் அவ்வப்போத கேள்விப்பட்டிருப்போம்…

ஆனால், டிஎம்சி என்றால் என்ன…. ஒரு டிஎம்சி என்பது எத்தனை லிட்டர் தண்ணீர் என்பது பாமரர்கள் உள்பட படித்த மேதாவிகள் வரை பலருக்கு தெரியாத நிலையே இன்றளவும் நீடித்து வருகிறது… இந்த நிலையில் டிஎம்சி என்ன என்பதை பத்திரிகை.காம் இணையதளம் உங்களுக்கு விவரிக்கிறது.

டிஎம்சி (TMC) என்பது ஆயிரம் மில்லியன் கியூபிக்  (Thousand million cubic) அதாவதுடிஎம்சி என்பது 100 கோடி கன அடி நீர் ஆகும். இதைத்தான் சுருக்கமாக டிஎம்சி என்று கூறி வருகிறோம்.

1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீருக்கு சமம். அப்படியானால் 1 டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னை மாநகர மக்களின் ஒரு மாத குடிநீர் தேவைக்கே 1டிஎம்சி தண்ணீர் போதுமானது…

ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமிக்க வேண்டுமென்றால்  12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும்.

அதுபோல ஒரு டி.எம்.சி தண்ணீரை 1லிட்டர் பாட்டிலில் போட்டு ரூ .20 என்று விற்பனை செய்தால், ஏறக்குறைய ரூ .56 கோடிக்கு விற்பனை செய்யலாம்….

அப்படியானால்….  கற்பனை செய்து பாருங்கள் மக்களே…. மலைக்க வைக்கிறதா…. 

தற்போதைய மழைக்காலங்களில் நாம் எவ்வளவு டிஎம்சி தண்ணீரை வீணாக்கி வருகிறோம்… எவ்வளவு தண்ணீர்  வீணாக கடலில் கலக்கிறது… இதுகுறித்து நாம் என்றைக்காவது சிந்தித்தோமோ? சித்தித்தால் தலைச்சுற்றி விடும் என்பதே உண்மை…

இனிமேலாவது மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நாம் எந்தவித முயற்சியும் மேற்கொள்வோம்… மழை நீர் சேகரிப்பை அமல்படுத்துவோம்…. . மீண்டும் குடிநீர் பற்றாக்குறையின் போது தண்ணீர்… தண்ணீர் என்ற அல்லாடுவதை தவிர்ப்போம்….  அரசை குறை கூறுவதை தவிர்த்து,  நாமே களத்தில் இறங்கி எதிர்காலத்தை வளமாக மாற்றுவோம்…

மழைநீர் கடலில் கலப்பதை தவிர்க்க வேண்டியது நம் அனைவருடைய கட்டாயக் கடமை…. இன்றே அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்….

தமிழகத்தில் உள்ள மேட்டூர்  ஆணை  சுமார் 1,700 மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த  அணையின் முழுக் கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும். தமிழகத்தின் சுமார் 12 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர்  தேவையை பூர்த்தி செய்கிறது.  கர்நாடகாவில் உள்நஎ கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையின் மொத்த நீர் கொள்ளவு 45.05 டிஎம்சி கொள்ளவை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.