டில்லி

டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ராணுவ சீருடையில் இருக்கும் வீடியோ வைரலாகி வரும் வேளையில் அது குறித்து சட்டம் தெரிவிப்பதை பார்ப்போம்.

சமீபத்தில் நடந்த விமானப்படை தாக்குதல் தேர்தல் பிரசாரத்தில் முதலிடம் வகிக்கிறது.   குறிப்பாக பாஜக தலைவர்கள் பலரும் விமானப்படை தாக்குதல் மற்றும் அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது குறித்து தொடர்ந்து தேர்தல் பரப்புரைகளில் பேசி வருகின்றனர்.

டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி நகரில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட போது ராணுவ சீருடையில் தோன்றி அபிநந்தன் குறித்த கவிதை ஒன்றை படித்துள்ளர்.  அத்துடன் அதைத் தொடர்ந்து நடந்த பைக் பேரணியில் அதே உடையில் கலந்துக் கொண்டுள்ளார்.   இந்த வீடியோ பலராலும் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் பலர் மனதிலும் உள்ள கேள்வி, “சட்டப்படி யார் வேண்டுமானாலும் ராணுவ சீருடையை அணிய முடியுமா?  இது சட்ட விரோதம் என கூறப்படுகிறது.   அவ்வாறு இருக்க பாஜக தலைவர் மனோஜ் திவார் ராணுவத்துடன் தொடர்பில்லாதவர் என்னும் போது அவர் எப்படி ராணுவ சீருடையில் பேரணியில் கலந்துக் கொண்டார்?” என்பதே  ஆகும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை வீரர்களின் சீருடையை அணிந்த சிலர் படைக்குள் ஊடுருவியதாக தகவல்கள் வெளிவந்து அவர்கள் கைது செய்யப்படனர்.  அதை ஒட்டி ராணுவ சீருடைகளை வெளியாருக்கு விற்கக் கூடாது எனவும் அவ்வாறு விற்பதும் அதை வாங்கி உடுப்பதும் சட்ட விரோதம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 171 ல். “பொதுத் துறை ஊழியர் அல்லாத யாரும் அந்த துறையின் சீருடை, மற்றும் அடையாளங்கள் உள்ளிட்ட எதையும் அணிந்துக் கொள்ளக் கூடாது.   அத்துடன் இது நடிப்புக்கு மட்டும் அணிந்துக் கொள்ள அனுமதி பெற்ற பிறகு அணிந்துக் கொள்ளலாம்

அவ்வாறு அனுமதி இன்றி அணிந்துக் கொண்டு பொது நிகழ்வில் கலந்துக் கொள்வோருக்கு மூன்று மாதங்கள் வரை சிறை தனடனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது