இந்தியா நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும்: ரஜினி வாய்ஸ்

நெட்டிசன்:

ந்தியா வளமான, பலமான நாடாக மாற ரஜினி சொல்லும் வழிகள் இவை. கடந்த  12-12-1995 ் அன்று அவர் தூதர்சனுக்கு அளித்த பேட்டி இது. கட்சிகளுக்காக ரஜினி கொடுத்த வாய்ஸ்கள்தான் பெரும்பாலோருக்கு நினைவில் இருக்கின்றன. இந்தியா முன்னேற ரஜினி கொடுத்த வாய்ஸ் இது. மறந்தவர்களும் கேட்டுப்பாருங்கள்.

(லெனின் பாபு அவர்களின் முகநூல் பதிவில் இருந்து)

 

“யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா  இருப்பது மாதிரி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா ஆக நம்ப அமைப்பை மாற்றனும்.

மத்திய  அரசிலிருந்து மாநில அரசுக்கு  நிறைய நிதி நிறைய அதிகாரம் – அதாவது ராணுவம், தபால் தந்தி,  வெளி நாட்டு தொடர்புகள் , வர்த்தகம் மாதிரியான விஷங்களை மட்டும் வச்சுகிட்டு மற்றதெல்லாம் மாநில அரசுக்குக் கொடுத்துடனும். கூடுதல் அதிகாரங்களை கொடுத்துட்டு மாநில அரசை
மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்கனும்.

மாநில அரசுக்கு கொடுக்குற நிதியும் அதிகாரமும் மாநில அரசோட நிறுத்திக்காம அது பஞ்சாயத்து வரைக்கும் போகனும்.

ஓர் அரசை உருவாக்குறதும், தூக்கி எறிவதும் படித்தவர்களின்  கையிலோ, கார்பரேட்டுகளின் கையிலோ இல்லை, அது கிராம மக்களின் கைகளில் தான் உள்ளது.

ஆக அந்த மறுமலர்ச்சி, காந்தி சொன்ன புரட்சி, கிராமத்திலிருந்து தான வரணும். அப்பதான் நாடே மறுமலர்ச்சி அடையும். இந்தியாவே நல்லா இருக்கும்”

 

ஆடியோ:

Leave a Reply

Your email address will not be published.