கடன் தாமத சலுகையில் வட்டிக்கு வட்டி வசூலிப்பதில் மெரிட் கூடாது – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

--

புதுடெல்லி: கொரோனா நெருக்கடி காரணமாக, கடன் தவணைகளை தாமதமாக திருப்பிச் செலுத்தும் சலுகையின் பலாபலன்கள் மக்களுக்கு கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டுமென்றும், அந்த சலுகையை அனுபவிக்கும் மக்களிடம், வட்டிக்கு வட்டி வசூலிப்பதில் மெரிட் அடிப்படையைப் பின்பற்றக்கூடாது என்றும் கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.

“கடனை தாமதமாக செலுத்தும் சலுகையை முடிவுசெய்தவுடன், அதன் முழு பலாபலன்கள் சரியாக கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்றுள்ளது உச்சநீதிமன்றம்.

மேலும், அனைத்து விஷயங்களையும் வங்கிகளே முடிவுசெய்யும் வகையில் அரசு விட்டுவிடக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கடனை தாமதமாக செலுத்தும் விஷயத்தில் வட்டி தள்ளுபடியானது முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதிக்கும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதற்கு நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

இந்த திட்டத்தில் எந்த நன்மையும் இல்லாத காரணத்தால், 90% கடனாளர்கள், இந்த சலுகையை நாடவில்லை என்று எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமத வட்டித்தொகைக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்குமா? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.

இந்த விஷயத்தில் முடிவெடுக்க, ரிசர்வ் வங்கி, நிதியமைச்சகம் ஆகியவற்றுக்கு வடுதல் அவகாசமும் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

கொரோனா நெருக்கடி காரணமாக, கடனாளர்களின் மாதாந்திர நிலுவைத் தொகை செலுத்துவதை நிறுத்தி வைக்கும் சலுகையை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க, வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.