மோடிக்கு மம்தாவின் அழைப்பு – ஸ்வபன்தாஸ் குப்தா கூறுவது என்ன?

புதுடெல்லி: உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்துவைக்க மேற்குவங்கத்திற்கு பிரதமர் மோடி செல்வதற்கு முன்னால் முறையான சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டுமென்று கூறியுள்ளார் பாரதீய ஜனதாவால் நியமிக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் ஸ்வபன்தாஸ் குப்தா.

சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கமான பிர்பூம் சுரங்கத்தை திறந்துவைக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்று மோடி அங்கு செல்வாரா? என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், ஸ்வபன்தாஸ் குப்தா இவ்வா று கூறியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்க முதல்வரின் அழைப்பை ஏற்று அந்த சுரங்கத்தை திறந்துவைத்தால், அது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இதன்மூலம் பல நேர்மறையற்ற மனிதர்களின் செயல்பாடுகள் ஊக்கம்பெறும்”

சுரங்கத் திட்டமானது அதன் தொடக்கநிலையில் உள்ளது. அதுதொடர்பான சமூக மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள் ஆராயப்படவில்லை. சுற்றுச்சூழல் அனுமதிகள் இன்னும் முழுமையாக பெறப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.