சென்னை,

ணமதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்ற கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜக கருப்பு பணம் ஒழிப்பு தினம் என்ற பெயரில் பண மதிப்பிழப்பு குறித்து அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் கமலஹாசனின் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்.

மேலும், மத்திய அரசின் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்றும்,  வருமானத்திற்கு அதிகமான பணம் இருக்குமேயானல் அதுகுறித்து விசாரிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் என்ட்ரி குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், அவர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு   பணமதிப்பிழப்பு குறித்து  மோடி அறிவித்ததும், மத்திய அரசின்  நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக  நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். பின்னர் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் காரணமாக, தற்போது புதிய  அரசியல் கட்சி தொடங்குவேன் என்று கூறியுள்ள நிலையில், பணமதிப்புழப்பு நடவடிக்கைக்கு அவசரப்பட்டு ஆதரவு தெரிவித்துவிட்டதாகவும், அதை வாபஸ் பெற்றுவிடுவதாகவும்  கமல்ஹாசன் பொதுமக்களிடம் பகிரங்கமாக  மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.