சென்னை,

டந்த தீபாவளியன்று வெளியான விஜய் நடித்துள்ள மெர்சல் படம் குறித்து சர்ச்சைகள், விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மறைமுகமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மெர்சல்  படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு, மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் பற்றிய தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தமிழக பாரதியஜனதா தலைவர்கள், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் என மிரட்டல் விடுத்து வந்தனர்.

இது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், திரையுலகத்தினர் மட்டுமின்றி அகில இந்திய ராகுல்காந்தி கூட கண்டனம் தெரிவித்திருந்தார்.  இதன் காரணமாக பாரதியஜனதாவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தமிழக அமைச்சர் பா.பா. பாண்டியராஜன் இன்று ஆவடியில் நடைபெற்ற அதிமுக ஆட்டோ சங்கம் சார்பில் நடைபற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாண்டியராஜன், மெர்சல் படத்தில் சென்சார் போர்டு கடமையை முறையாக செய்துள்ளது என்றும்,  படம் குறித்து கருத்து தெரிவிப்பது அவரவர் உரிமை, மெர்சல் படத்திற்கும் நடிகர் விஷால் வீட்டில் நடைபெற்ற வருமான வரிசோதனைக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் காரணமாக அமைச்சர் மெர்சல் படத்துக்கு ஆதரவு அளிப்பதை மறைமுகமாக கூறி உளளார்.