கற்பழிப்பு.. சீமான் பேசியது என்ன?:  நாம் தமிழர் கட்சி விளக்கம்

பாக்யராசன்    –         சீமான்

“”நான் பிரபாகரனின் இடத்திலிருந்திருந்தால் சிங்கள பெண்களின் முலைகளை அறுத்திருப்பேன், அவர்களைக் கற்பழித்திருப்பேன்”  என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோ, சமூகவலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

சீமானின் இந்தப் பேச்சை பலரும் கண்டித்து வருகிறார்கள். கவிஞர் மாலதி மைத்ரியும் தனது முகநூல் பக்கத்தில், சீமானை வன்மையாகக் கண்டித்து எழுதினார். இதை பத்திரிகை டாட் காம் இணைய இதழின் “நெட்டிசன்” பகுதியில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையல், நாம் தமிழர் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சே.பாக்யராசன், நம்மைத் தொடர்பு கொண்டு இது குறித்த விளக்கத்தைத் தெரிவித்தார். அவர் நம்மிடம் தெரிவித்ததாவது:

“ஒருவர் பேசியதை முழுமையாக வெளிப்படுத்தாமல், முன்னும் பின்னும் வெட்டி, ஒரிரு நிமிடங்கள் மட்டுமே காட்சிப் படுத்துவது முறையல்ல. ஆனால் அப்படித்தான் சீமான் பேச்சும் ஆக்கப்பட்டிருக்கிறது.

“யார் பயங்கரவாதி.. தலைவர் பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. சிங்களர்களை அவர் கொடுமைப்படுத்தியதில்லை. சிங்கள வெறியர்கள்தான், தமிழர்களை படுகொலை செய்கிறார்கள்.. தமிழ்ச் சகோதிரிகளை பலாத்காரப்படுத்தி நடு சாலையில் வெட்டிக்கொல்கிறார்கள். ஆனால பதிலுக்கு தலைவர் பிரபாகரன் அப்படிச் செய்வதில்லை. முறையான போரைத்தான் தொடுக்கிறார்” என்று அந்தக் கூட்டத்தில் பிரபாகரனை உயர்த்திப் பேசினார் சீமான்.

மேலும், பிரபாகரன் இடத்தில் தான் இருந்திருந்தால், அப்படி நடந்துகொண்டிருக்க மாட்டேன் என்று ஒப்பிட்டு, பிரபாகரனை உயர்த்திப் பேசுகிறார்.

அவரது பேச்சை முழுவதுமாகக் கேட்டால் இது புரியும்.

தவிர.. 2009ம் ஆண்டு,  ஜூலை 21ம் தேதி சென்னையில்  கொளத்தூர் மணி தலைமையில் நடந்த பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசியது அந்தப் பேச்சு.

அதாவது, ஈழத்தமிழர்கல் உச்சகட்ட இனப்படுகொலைக்கு ஆளான காலகட்டம். அப்போது அனைத்துத் தமிழர்களுமே செய்வதறியாது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தது அனைவருக்கும் தெரியும்..

அடுத்து இன்னொரு விசயம்… இநத்ப் பேச்சை கண்டிப்பவர்கள் முழுதாக வீடியோவை பார்க்கவில்லை என்பதோடு, அந்த காலகட்டத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.. அதோடு இதைச் சாக்காக வைத்து தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்தவும் முயற்சிக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு விசயம்… அந்தப் பேச்சு.. பெரியார் திராவிடர் கழக கூட்டத்தில் பேசியது. சீமான் பேச்சுக்குக் கைதட்டியவர்கள் திராவிட உணர்வாளர்கள். ஆகவே நண்பர்களே.. சீமானையோ, நாம் தமிழர் இயக்கத்தையோ வன்மத்துடன் தாக்குவது உங்கள் நோக்கம் என்றால் அதைச் செய்யுங்கள். எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் அதில் கொஞ்சமேனும் உண்மை இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது!” என்று கூறி முடித்தார் சே.பாக்யராசன்.

https://www.youtube.com/watch?v=eYm802_2bCk