டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்வாரா மல்யுத்த நட்சத்திரம் சுஷில்குமார்!

புதுடெல்லி: இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

74 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு வீரர் ஜிதேந்தர் பெற்ற வெற்றிதான் இதற்கு காரணம் என்கின்றன தகவல்கள்.

சுஷில்குமார் ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்றவர். இவர் தற்போது காயத்தில் இருப்பதால், ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வீரர்களை தேர்வுசெய்ய, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நடத்துகிற தகுதிபெறும் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது.

ஆனால், அந்த எடைப்பிரிவில் நடந்த தகுதிபெறும் போட்டியில் பங்கேற்ற மற்றொரு வீரர் ஜிதேந்தர் குமார், தனது போட்டியாளர் அமித் தான்கரை வீழ்த்தினார். இதனையடுத்து வேறுசில போட்டிகளில் பங்கேற்கவுள்ளார் ஜிதேந்தர் குமார்.

அந்தப் போட்டிகளில் அவர் பெறுகின்ற வெற்றியைப் பொறுத்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப்போவது சுஷில் குமாரா? அல்லது ஜிதேந்திரக் குமாரா? எனபது தெரியவரும்.