வரும் 2018 புத்தாண்டில் உங்கள் அதிர்ஷ்ட எண்கள் எவை தெரியுமா?

உங்கள் பிறந்த  தேதிக்கு 2018ம் ஆண்டில் அதிர்ஷ்ட எண்கள் இவைதான்.  இவற்றை கப்புன்னு புடிச்சுக்கிட்டு பட்டுன்னு (இன்னும்) பெரிய ஆளா ஆயிருங்க. 

 

மேஷம் (மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை  பிறந்தவர்கள்)

நீங்கள் ஆற்றல் மிக்கவர்கள்.  துணிச்சலானவர்கள்.  செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சாகசங்கள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 10, 12, 20, 31.

 

ரிஷபம் (ஏப்ரல் 21 முதல் மே 21 வரை பிறந்தவர்கள்)

நீங்கள் பொறுமைசாலிகள்.. புத்திசாலிகள்.  பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து நிதானமாக யோசித்து சமாளித்துவிடுவீரகள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் 6, 9, 7, 13, 21, 9.

 

மிதுனம் (மே 22 முதல் ஜூன் 21 வரை பிறந்தவர்கள்)

நீங்கள் எதையும்  உடனடியாக யோசித்து முடிவெடுத்துவிடுவீர்கள். இந்த வருடம் நிதானம் தேவை.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9, 25, 30, 31

 

கடகம் (ஜூன் 22 முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்கள்)

நீங்கள் கற்பனை திறன் கொண்டவர்வர்கள். இந்த வருடம் பணவரவு சுமாராக இருக்கும். சிக்கனம் தேவை.

உங்களுக்கான அதிர்ஷ்ட ராசி எண்கள் இவை: 2, 20, 25, 32, 40

 

சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 21 வரை பிறந்தவர்கள்)

நீங்கள் விசுவாசம் மிக்கவர்கள். இந்த வருடம் உங்கள் வாழ்க்கியில் சில முக்கியமான மாற்றங்கள்.. முன்னேற்றங்கள் நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 11, 22, 30, 32.

 

கன்னி (ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 23 வரை பிறந்தவர்கள்)

நீங்கள் இயல்பாகவே உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இந்த வருடம் ஏற்றம் தரும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 13, 14, 29, 30.

 

துலாம் (செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை பிறந்தவர்கள்)

நீங்கள் ரசனை மிக்கவர்கள். வாழ்க்கையை ரசித்து வாழ்வீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 9, 11, 13, 20, 26, 35.

 

விருச்சிகம் (அக்டோபர் 24 முதல் நவம்பர் 21 வரை பிறந்தவர்கள்)

நீங்கள் மிக புத்திசாலிகள். எதையும்  சுயமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 9, 10, 11, 13, 22.

 

தனுசு ( நவம்பர் 22 முதல் டிசம்பர் 22 வரை பிறந்தவர்கள்)

நீங்கல் தன்னம்பிக்கை மிக்கவர்கள். உங்களது ஆற்றல் இந்த வருடம் சிறப்பான முறையில் வெளிப்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 4, 6, 15, 17, 30, 31.

 

மகரம் (டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை பிறந்தவர்கள்)

நீங்கள் விடாக்கண்டர்கள். நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 9, 15, 16, 29, 33, 40.

 

கும்பம் (ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை பிறந்தவர்கள்)

நீங்கள் அமைதியானவர்கல். நட்புடன் அனைவரிடமும் பழகுவீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள் இவைதான்: 8, 10, 11, 29, 40, 42.

 

மீனம் (பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை)

நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பீர்கள். அதே நேரம் களத்தில் இறங்கிவிட்டால் அதிரடியாக செய்து முடிப்பீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 11, 12, 20, 31.

 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

 

 

You may have missed