அதிமுக அணிகள் இன்று இணைந்தால் ஆபத்து: ஜோதிடர் கணிப்பு

 

 

.தி.மு.க.வி்ன் இரு அணிகள் இணையும் காட்சிகள் பரபரப்பாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று அணிகள் இணைந்தால் எதிர்காலம் (கட்சியின்) எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அவர்களில் ஒருவரது பதிவு இது:

 

இன்றைய தேதியில் அதாவது ஆவணி மாதம் 05ம் தேதி – ஆங்கிலம் 21 ஆகஸ்டு 2017 – திங்கட்கிழமைக்கான கிரகநிலையை பொறுத்தவரை:

முற்பகல் 11.56 முதல் மதியம் 2.01 வரை விருச்சிக லக்னம் – லக்னத்தில் சனி இருக்கிறார். அரசு கிரகமான சூரியன் சிம்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். லக்னாதிபதி பாதகஸ்தானமான கடகத்தில் பலமற்று காணப்படுகிறார்.

மதியம் 2.01 முதல் 4.13 வரை – தனுசு லக்னம் – இந்த நேரத்தில் இணைவு ஏற்பட்டால் ஆட்சி கவிழும் கிரக நிலையே நீடிக்கிறது.

மாலை 4.13 முதல் 6.19 வரை மகர லக்னம். இந்த வேளையில் இணைவு என்பது மிகக் கெட்ட பலன்களையே கொடுக்கும். லக்னத்தில் கேது இருப்பதாலும் அஷ்டமாதிபதி சூரியன் வலுவாக இருப்பதாலும் மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.