மான்செஸ்டர்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டி ஒருவேளை மழையால் தடைபட்டால், என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில், ஜுலை 8ம் தேதி ஒருவேளை மழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே, முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அப்படி போட்டி தடைபட்டால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு பதிலும் இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் 15 புள்ளிகளைப் பெற்று இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. நியூசிலாந்தோ 11 புள்ளிகளை மட்டுமே பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. எனவே, அரையிறுதி போட்டி தடைபட்டால், புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா அரையிறுதியில் இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும்.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கவிருந்த லீக் போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. வார்ம்-அப் போட்டியில் மட்டுமே 2 அணிகளும் மோதின. அதில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. பலரின் கணிப்பும், முதலாவது அரையிறுதியில் இந்தியாவே வெல்லும் என்பதாகவே இருக்கிறது.