ஜெனிவா: பிஎன்இஎஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ப்ளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ், ஆற்றல் பயன்பாடு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான முன்கணிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வரும் 2050ம் ஆண்டு காலகட்டத்தில் காற்று மற்றும் சூரிய சக்தி, உலகின் ஆற்றல் தேவையில் 50% அளவிற்கு பங்களிப்பை வழங்கும். மேலும், அந்த காலகட்டத்தில் நிலக்கரி பயன்பாடு 37% என்பதிலிருந்து 12% என்பதாக குறைந்துவிடும்.

அப்போது, ஆற்றலுக்காக எண்ணெய் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட நின்று போயிருக்கும். அதேசமயம், நியூக்ளியர் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் பயன்பாடு தற்போதைய அளவிலேயே தொடரும்.

ஐரோப்பாவை பொறுத்தவரையில், 92% ஆற்றல் பயன்பாடு காற்று மற்றும் சூரிய சக்தியின் மூலம் கிடைக்கப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த விஷயத்தில் சிறிதிசிறிதாக மாறுதல்களுக்கு உள்ளாகும் என்று கூறப்பட்டுள்ளது.