சென்னை,

ன்று ஆளுநர் உரையுடன்  தொடங்கப்பட்ட தமிழக சட்டசபை கூட்டம் ஆளுநர் உரை முடிந்ததும் ஒத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவலல் ஆய்வு கூட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரை தமிழக சட்டமன்றம் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம்  சபாநாயகர் தனபால்நடைபெற்றது. 17 உறுப்பினர்களை கொண்ட அலுவல் ஆய்வு கூட்டத்தில் திமுகவை சேர்ந்த துரைமுருகனை தவிர மற்ற 16 பேர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் செய்தியாளர்களிடம் விளக்கினர்.

அப்போது,  சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்கி ஜனவரி 12 வரை நடைபெற உள்ள தொடரின் அனைத்து நாட்களும் கேள்வி நேரம் இருக்கும் என்றார்.

நாளை முதலாவதாக  ஒகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கும் மரணமடைந்த அதிகாரிகளுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், அதையடுத்து  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

அலுவல விவரம்:

9ந்தேதி: இரங்கல் தீர்மானம், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழிதல் மற்றும் விவாதம்

10ந்தேதி: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத தொடர்ச்சி

11ந்தேதி: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத தொடர்ச்சி

12ந்தேதி: 2017-18ம் ஆண்டுக்கான துணை நிதி அறிக்கை பேரவைக்கு அளித்தல்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும்,  மேலும் கூடுதல் துணைநிதி நிலை அறிக்கை மற்றும், மானிய கோரிக்கைகள் குறித்தும், அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.