டில்லி:

ஞ்சி சீசனில் திறமையான ஆடியும், 854 ரன்கள் எடுத்திருந்தும், இந்தியா ஏ அணியில்கூட எங்களை தேர்வு செய்ய மறுக்கிறார்கள்? ஏன் இந்த பாரபட்சம் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று சவுராஷ்டிரா அணியின் ஆல்ரவுண்டரான ஷெல்டன் ஜாக்சன் காட்டமாக கேள்வி விடுத்துள்ளார்.

வலது கை பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ஷெல்டன் ஜாக்சன் 2011ம்ஆண்டு  சவுராஷ்டிரா வுக்காக தனது முதல் முதலாக அறிமுகமானார். அவர் 2012-13 ஆம் ஆண்டில் வெற்றிகரமான உள்நாட்டு போட்டிகளில் ஆடி தனது திறமையை நிரூபித்து காட்டி உள்ளார். ஐபிஎல் போட்டியின் 6வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காவும் ஆடியுள்ளார்.

இந்த நிலையில், தங்களை ஏன்  இந்தியா ஏ அணியிலோ, துலீப் கோப்பை அணியிலோ சேர்க்க மறுக்கிறார்கள் என்பது குறித்து டிவிட்டரில் காட்டமாக கேள்வி விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது மனக்குமுறலை தனது டிவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,   “சவுராஷ்டிரா ரஞ்சி இறுதியில் இந்த ஆண்டு ஆடியது, வீரர்கள் நன்றாக ஆடி நிரூபித்தாலும் இந்திய ஏ தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை, ரஞ்சி ட்ராபி இறுதியில் ஆடினாலும் அதன் முக்கியத்துவம் பூஜ்ஜியமே… அல்லது சிறிய அணிகள் புறக்கணிக்கப்படுகின்றனவா தெரியவில்லை .

ஏனெனில் சவுராஷ்ட்ரா அணி கடந்த 5 ஆண்டுகளில் 3 இறுதிப் போட்டிகளில் சிதான்ஷு கோடக் பயிற்சியின் கீழ் ஆடியுள்ளது. எங்களிடம் சில நல்ல ஆட்டக்காரர்கள்பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் உள்ளனர், ஆனால் இவர்களுக்கான இடம் மறுக்கப்பட்டு வருகிறது.

என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறுகின்றனர், ஆனால் நாங்கள்  இந்த அருமையான அமைப்பைப் பிரதிநிதித்துவம் செய்து ஆடி வருகிறோம், ஆகவே வீரர்களாக நாங்கள் எங்கு சோடை போகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அல்லது எங்கள் கிரிக்கெட் வாழ்க்கை இப்படியே முடிந்து விட வேண்டுமா என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆல்ரவுண்டரான ‘ஷெல்டன் ஜாக்சன் கடந்த ரஞ்சி சீசனில்  7 அரைசதங்கள், 2 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஆதரவாக  பெங்கால் வீரர் மனோஜ் திவாரியும் கருத்து பதிவிட்டு உள்ளார். அதில், “உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது ஷெல்டன். உங்கள் விரக்தி நியாயமானதே. ஆனாலும் தொடருங்கள், கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இது பரபரப்பான நிலையில், ஷெல்டன் ஜாக்சனின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள பிசிசிஐ,  “உள்நாட்டு வீரர்கள் போல் தேர்வாளர்கள் சுதந்திரமாக பதில் அளித்து விட முடியாது, என்று தெரிவித்து உள்ளார்.