தமிழகஅரசு குறித்து கமல் கூறியதில் என்ன தவறு? திருநாவுக்கரசர்
சென்னை,
தமிழக அரசு செயல்படாமல் இருக்கிறது நடிகர் கமல்ஹாசன் என கூறியதில் என்ன தவறு உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,
தமிழகத்தில் அரசு செயல்படாமல் இருப்பதாக அனைத்து கட்சியும் தான் குற்றம் சாட்டி வருகின்ற னர். தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் இதையேதான் கூறி வருகிறார். இந்த விஷயத்தில், கமல்ஹாசன் கூறியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், இப்போது உள்ள பாட திட்டத்தை மாற்றி, சி.பி.எஸ்.சி போல, தமிழக பாட திட்டத்தையும் சமநிலையில் கொண்டு வருவதற்கு குறைந்தது ஐந்து ஆறு வருடமாவது ஆகும். அதன்பிறகே நீட் அமல்படுத்த வேண்டும்.
மேலும், மாநில அரசு விரும்பினால் மட்டுமே நீட் தேர்வில் விதிவிலக்கு வாங்க முடியும் அதற்கான சட்டம் இருக்கின்றது என்றார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னார் அதிமுக பலவினப்பட்டு இருக்கின்றது. மத்திய அரசுதான் அ .தி.மு.கவை மூன்று அணியாக உடைத்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கியது மோடியும், அமித்ஷாவும் தான் என்று குற்றம் சாட்டினார்.
தற்போது டில்லியில் மோடி அரசு அதிமுக அணிகளுக்கு இடையே கட்ட பஞ்சாயத்து செய்து வருகிறார் என்றும் கூறினார்.
ஓஎன்ஜிசிக்கு எதிரான கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நான் கலந்து கொண்டு அவர்களை சந்தித்து விட்டு வந்தேன்.
கட்சி தேர்தல் முடிந்த பிறகு ராகுல்காந்தி தமிழ்நாட்டில் பல இடங்களில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.