இந்தியா உள்பட 106 நாடுகளில் வாட்ஸ்அப் சேவை சிலமணி நேரம் பாதிப்பு…

ந்தியா உள்பட உலகம் முழுவதும் சுமார் 106 நாடுகளில் வாட்ஸ்அப் சேவை சிலமணி நேரம் பாதிப்படைந்தது. இதனால் பயனர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இன்றைய  நவீன யுகத்தில் சமுக வலைதள சேவை ஒவ்வொருக்கும் இன்றியமையாததாகி உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் இன்று மாலை இந்திய நேரப்படி சுமார் 4 மணி அளவில் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வாட்ஸ்அப் சேவை முடங்கியது.

இந்தியா, பிரேசில், மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாகாணங்கள் உள்ளிட்டவற்றில் வாட்ஸ் அப் சேவை பாதிக்கப்பட்டது.  இதனால் பயனார்கள் தகவல்களை பரிமாற முடியாமல் அவதிப்பட்டனர்.

சுமார் 3 மணி நேரம் இந்த பாதிப்பு இருந்தாக கூறப்படுகிறது.  இதற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

வாட்ஸ்அப் முடங்கியது குறித்து பயனர்கள் downdetector.com மற்றும் outage.report போன்ற வலைத்தளங்களிலும் புகார் செய்தனர்.

இந்தியா, யுனைடெட் கிங்டம், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா மற்றும் 106 நாடுகளில் இருந்து 2,709 புகார்கள் வந்துள்ளதாக Outage.report தெரிவித்துள்ளது. சுமார்  20 நிமிடங்களில் வாட்ஸ்அப் பிரச்சினைகள் குறித்த 107 புகார்கள் குவிந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துஉள்ளது.

அதுபோல, மாலை 4 மணி முதல் வாட்ஸ்அப் பிரச்சினைகள் குறித்து 4,000 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததாக, டவுன்டெக்டர்.காம் (downdetector.com) இணையதளம் தெரிவித்துள்ளது.

பின்னர் இரவு  7 மணி முதல் உலகின் அனைத்து பகுதிகளிலும் வாட்ஸ்அப் சேவை எந்தவித பிரச்சினையும் இன்றி  இயங்கி வருகிறது.