சென்னை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் காவல்துறை கேட்ட விவரங்களை அளிக்க வாட்ஸ்அப் நிறுவனம் மறுத்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை பலாத்காரம் செய்து அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக புகார்கள் வந்தன. இதை ஒட்டி திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், ‘பார்’ நாகராஜ், செந்தில், வசந்த், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் சரணடைந்துள்ளான்.

மணிவண்ணன் சரணடைவதற்கு முன்பு தனது வாட்ஸ்அப் உரையாடல்களை அழித்துள்ளான். இவர்கள் அனைவரும் இந்த பாலியல் வீடியோக்களை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்கள் மூலமே பகிர்ந்துள்ளனர். அதனால் அழிக்கப்பட்ட விவரங்களை மீட்டெடுக்க கால அவகாசம் கோரி சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு அளித்தது/

இந்த தகவல்கள், படங்கள் வீடியோக்கள் குறித்த விவரத்தை வாட்ஸ்அப் நிறுவனம் தர மறுத்துள்ளது. இது குறித்து முகநூல் நிறுவனமும் எவ்வித விவரமும் அளிக்க மறுத்துள்ளது. .

இதை காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர். அத்துடன் சமூக ஊடகங்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்த வழக்கில் தடை உண்டாவதாக தமிழக அரசு சென்னைஉயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.