Random image

போலி செய்திகள் பரவுவதை தவிர்க்க வானொலி மூலம் வாட்சப் நிறுவனம் பிரச்சாரம்

சமூக வளைதலங்களில் போலி செய்திகள் பரவுவதை தடுக்க 10 மாநிலங்களில் வானொலி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. போலி செய்திகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக வாட்சப் நிறுவனம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

whatsapp-

குழந்தைகளை கடத்தி செல்வதாகவும், பசுக்களை கடத்துவதாகவும் உத்திரப்பிரதேசம், தமிம்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வாட்சப்பில் வதந்திகள் பரவியது. இதன் காரணமாக வீதிகளில் நடந்து சென்ற சில அப்பாவிகளை பொதுமக்கள் தாக்கியதில் ஒரு சிலர் உயிழந்தனர். இதையடுத்து, வாட்சப்பில் போலி வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது.

மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து, வாட்சப் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதில் ஒன்றாக அகில இந்திய வானொலி மூலம் போலி செய்திகள் பரவுவதை தடுக்க விளம்பங்களை வாட்சப் நிறுவனம் வெளியிட்டது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ போலி செய்திகளைத் தடுக்க முதல் கட்டமாக பிஹார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உட்பட 7 மாநிலங்களில் ஆகஸ்ட் 29-ம் தேதி வானொலி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதில், வாட்ஸ் அப்பில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து செயல்படும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டோம்.

அதன் அடுத்தக்கட்டமாக அசாம், திரிபுரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய 10 மாநிலங்களில் வானொலி மூலம் பிரச்சார விளம்பரம் வெளியிட்டுள்ளோம். இந்த மாநிலங்களில் உள்ள 83 வானொலி நிலையங்கள் மூலம் இந்தப் பிரச்சாரம் ஒலிபரப்பப்படும். நேற்று தொடங்கிய இந்த பிரச்சாரம் 15 நாட்களுக்கு ஒலிபரப்பப்பட உள்ளது. மேலும், அசாமீஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, ஒரியா, தமிழ் ஆகிய 8 மொழிகளில் இந்த விளம்பரம் 15 நாட்களுக்கு ஒலிபரப்பப்படும் “ என்று கூறப்பட்டுள்ளது.