கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்

நேற்றிலிருந்து (வெள்ளிக்கிழமை 11.10.2019 ) கூகிள் பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப் செயலி காணப்படவில்லை என்று பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நிறுவிய வாட்ஸ்அப் இருந்தால் அது பிரச்னையில்லை.  ஆனால் ஏற்கனவே உள்ள வாட்ஸ்அப் செயலியை நீக்கிவிட்டு புதியதாக நிறுவ பிளே ஸ்டோருக்கு சென்றால் அங்கே வாட்ஸ்அப் செயலி காணப்படவில்லை

ஆனால் வாட்ஸ்அப் பிசினஸ் பதிப்பும், வாட்ஸ் அப் பீட்டா பதிப்பும் உள்ளது. சாதாரண பயனாளர்களுக்கான வாட்ஸ்அப் காணப்படவில்லை. கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டதற்கான காரணம் இன்னமும் புலப்படவில்லை.

செல்வமுரளி

கார்ட்டூன் கேலரி