ஆர் எஸ் எஸ் அமைப்பின் வாட்ஸ்அப் அட்மின்கள் வன்முறையை தூண்டியதாக கைது

திருவனந்தபுரம்

த்துவா சிறுமி பலாத்காரத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறை ஆனதால் அதற்கு அழைப்பு விடுத்த வாட்ஸ் அப் குருப்பின் ஆர் எஸ் எஸ் ஐ சேர்ந்த அட்மின்கள் கைது செயப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறிமி ஒருவர் கூட்டு பலாதாரம் செய்யப்பட்டதாக வந்த தகவல் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது.   இந்தக் குற்றத்தை இழைத்தோருக்கு கடும் தண்டனை அளிக்கக் கோரி நாடெங்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்நிலையில் கேரளாவில் இயங்கி வரும் வாட்ஸ்அப் குருப்பான ”வாய்ஸ் ஆஃப் யூத்” என்னும் குழு மாநிலம் எங்கும் கண்டனப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையாக உருவெடுத்தது.    போராட்டத்தின் போது மூடப்படாத கடைகளையும்,  பேருந்துகளையும் போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கி உள்ளனர்.    மக்களில் யாருக்கும் இந்த போராட்டம் பற்றி எதுவும் தெரியாத நிலையில் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.   ஒரு சில இடங்களில் காவல்துறையினரும் தாக்கப்பட்டுள்ளனர்.

முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.    அவர்களிடம் விசாரித்த போது இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த வாட்ஸ் அப் குரூப் பற்றி தெரிய வந்துள்ளது.    அந்த குரூப்பின் அட்மின்கள் ஐந்து பேரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறன்றனர்.     இந்த 5 அட்மின்களும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.